தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் வரவுகளை இ-செலான் மூலம் பெறும் நடைமுறை தொடக்கம்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: நிதித்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில், அரசின் வரவுகளை மின்செலுத்துச் சீட்டு மூலம் பெறும் நடைமுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

tn cm Launch of e - challan Receipt of Government Credits
tn cm Launch of e - challan Receipt of Government Credits

By

Published : Feb 8, 2021, 2:48 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.8) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதித்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் ( IFHRMS ) அரசின் வரவுகளை மின்செலுத்துச் சீட்டு ( e - challan ) மூலம் பெறும் நடைமுறையைதொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள கருவூலம் மற்றும் சம்பளக்கணக்கு அலுவலகங்களில் தற்போது 19,000 க்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கின்றனர்.

மேலும், சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமானது, டிஜிட்டல் ஒப்பம் மற்றும் பயோமெட்ரிக் முறை மூலம் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும்.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின்வரவாக (e - receipts) மின் செலுத்துச்சீட்டு மூலமாக நேரடியாக பெறுவதற்கான நடைமுறையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று(பிப்.8) தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், பொதுமக்கள், அரசு துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசிற்கு செலுத்த வேண்டிய வரவினங்களை, மின்வரவுகளாக 24 மணி நேரமும் தங்குதடையின்றி இணையத்தின் மூலம் (www.karuvoolam.tn.gov.in) செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அரசு நிகழ்நேர வருவாயை உடனுக்குடன் பெற இயலும்.

இ-செலான் மூலம் பெறும் நடைமுறை

இச்சேவைகளுக்காக பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகள் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய இரு வங்கிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துள்ள நிலையில் இவ்விரு வங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு, அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டமும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், வங்கி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

ABOUT THE AUTHOR

...view details