தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 5) தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
மேலும், கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழக கல்லூரிகள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 58 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் - மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்தார்.
அதன் விவரம் பின்வருமாறு:
கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் ஆறு கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம்,
சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு கோடியே 97 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், அரசு பொறியியல் கல்லூரியில் ஐந்து கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் மூன்று கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்,
திருச்சிராப்பள்ளியில் துவாக்குடி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்
மயிலாடுதுறை - தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள்,