தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அர்ஜுனா விருதாளருக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்! - அர்ஜுனா விருது பெற்ற பாடிபில்டர் பாஸ்கரன்

சென்னை: அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்!
பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்!

By

Published : Dec 23, 2019, 8:44 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன் தேசிய, சர்வதேச அளவிலான உடற்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

இதற்காக மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாடி பில்டர் பாஸ்கரனை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கினார். இதில் தலைமை செயலர் சண்முகம், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்!

அதில் 15% அவரது பயிற்றுநர் எம்.அரசுக்கு வழங்கவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய யானைகள்!

ABOUT THE AUTHOR

...view details