சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு! - ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு!
சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக தலைமை மருத்துவரிடம் நலம் விசாரித்தார்.
cm
நேற்று, அவருக்கு மூச்சுத்திணறல் மோசம் அடைந்த காரணத்தால் வென்டிலேட்டர் உதவியுடன் 80 விழுக்காடு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. தற்போது அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.