தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்எல்ஏக்களுக்கு புதிய சலுகைகள் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு - எம்எல்ஏக்களுக்கு புதிய சலுகைகள்

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புதிய சலுகைகள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

TN CM edappady palaniswami announced New concessions for MLAs
TN CM edappady palaniswami announced New concessions for MLAs

By

Published : Mar 24, 2020, 5:18 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு புதிய சலுகைகளை அறிவித்து பேசினார்.

அவர் பேசியது பின்வருமாறு:

  • சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியிலிருக்கும்போது இறக்க நேரிட்டால் அவரின் குடும்பத்திற்கு தற்போது 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
  • சட்டப்பேரவை மற்றும் மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியமாக 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
  • இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 5 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்
  • சட்டப்பேரவை மற்றும் மேலவை முன்னாள் உறுப்பினர்களின் சட்டமுறை வாரிசுதாரர்களுக்கு மாதக் குடும்ப ஓய்வூதியமாக 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
  • ஒவ்வொரு நிதியாண்டிலும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
  • படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், மேலவை முன்னாள் உறுப்பினர்கள் மட்டுமே பயணம் செய்ய இதுவரை அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது உதவியாளர்கள் குளிர்சாதன இருக்கைவசதி கொண்ட பேருந்துகளில் பயணம் செய்ய இனி அனுமதிக்கப்படுவார்கள்

ABOUT THE AUTHOR

...view details