தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரின் திருக்குறள் கருத்து தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்துவிட்டது - முதலமைச்சர்

சென்னை: திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்துவிட்டது என முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Jul 17, 2020, 1:03 AM IST

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், " தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது.‌

இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில், தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும்.

இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodiஅவர்கள் கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details