சென்னை: ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி, அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தி ட்வீட் செய்துள்ளார்.
தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கட்டபொம்மன் - நினைவுகூரும் முதலமைச்சர் - ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய கட்டபொம்மன்
தூக்குமேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு, வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என அவரது நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தினார்.
tn cm Edappadi Palaniswami pay homage to Veerapandiya Kattabomman on his Memorial Day
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை எதிர்த்து, என் நாட்டில் விளையும் பொருள்களுக்கு வரி செலுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு, வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவரது நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.