இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய கோட்டைக் கொத்தளத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.
சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விருது! - தேசிய கொடியை ஏற்றி வைத்தார் எடப்பாடி
சென்னை: 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர், கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிவருகிறார்.
பின்னர், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கிவருகிறார். அதன்படி, இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதும், மீன்வளத் துறை உதவி இயக்குநர் ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருதும், கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த திருநெல்வேலி கடையத்தைச் சேர்ந்த மூத்தத் தம்பதியினருக்கு, அதி தீர வீரச்செயலுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இஸ்ரோ தலைவர் சிவனைத் தவிர, ரம்யா லட்சுமிக்கும், நெல்லைத் தம்பதியினருக்கும் விருதுகனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும், முதலமைச்சரின் சிறந்த நல் ஆளுமைக்கான விருதுகள் உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டன.