தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தன்னை விவசாயி என கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறார் முதலமைச்சர் - கனிமொழி - சென்னை விமான நிலையம்

வேளாண் மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டுள்ள நிலையில், தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளார் என திமுக எம்பி., கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

tn CM decision in Agriculture Bill was against the farmers said dmk mp kanimozhi
tn CM decision in Agriculture Bill was against the farmers said dmk mp kanimozhi

By

Published : Sep 24, 2020, 7:54 PM IST

சென்னை:சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி, " நாடு முழுவதும் வேளாண் மசோதாவை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களில் கூட இப்பிரச்னை பற்றி எரியக் கூடிய நிலை இருக்கிறது.

ஆனாலும் விவசாயிகளுக்கு எதிராக, விவசாயிகள் உரிமைகளை தட்டி பறிக்கக் கூடிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. மசோதாவை அனைவரும் எதிர்த்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமாவும் செய்துள்ளார்.

வேளாண் மசோதா குறித்து கனிமொழி

திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து, திமுக தலைவர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். மத்திய அரசின் பினாமியாக செயல்படும் முதலமைச்சர், மசோதாவை வரவேற்றிருப்பது விவசாயிகளுக்கு எதிரான ஒன்று.

தன்னை விவசாயி என்று அழைக்கும் முதலமைச்சர், விவசாயிகளுக்கு செய்து இருக்கிற மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் இது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயி விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்வாரா? - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details