தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவு: இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவு

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Cm condolence
Cm condolence

By

Published : Apr 8, 2021, 5:08 PM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள், நேற்றிரவு (ஏப்ரல்.07) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வேதனை அடைந்துள்ளேன்.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி

ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், கழக உடன்பிறப்புகள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த வள்ளியம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்'

ABOUT THE AUTHOR

...view details