தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில் காவல், தீயணைப்புத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அவை பின்வருமாறு:
1. ஒரு கோடி ரூபாய் செலவில் தீ விபத்து, மீட்புப் பணிகளை வானிலிருந்து கண்காணிக்க 50 ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும்.
2. ரூ.8.54 கோடி செலவில் 1500 தீயணைப்புப் பணியாளர்களுக்கு தற்காப்புச் சாதனங்களைச் கொண்ட உடைகள் வழங்கப்படும்.
3. காவல் நிலையம், சிறப்புப் பிரிவுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் காவலர்களுக்கு மாதத்திற்கு ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கு உண்டாகும் செலவு, எரிபொருள் படியாக வழங்கப்படும். இதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.