கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர் சண்முகம் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார். ஜூலை 1ஆம் தேதி அவர் தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
இவரது பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.