ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையை மீறினால் அபராதம் - தலைமைச் செயலாளர் - TN Chief Secretary Rajeev Ranjan

சென்னை: கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மீறுபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Chief Secretary
Chief Secretary
author img

By

Published : Mar 16, 2021, 6:40 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அதில், தமிழ்நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா தாக்கம் அதிகரித்துவருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் மீண்டும் பழையபடி கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தபட்டவர்களை தீவிரமாக கம்காணிக்கப்பட வேண்டும். வங்கிகள், பள்ளிகள் போன்ற இடங்களிலும், நோய் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதனை சம்பந்தபட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கீழ்க்காணும் உத்தரவுகள், அறிவுரைகளை சம்பந்தபட்ட துறையினருக்கு வழங்கினார்.

  • பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும். இதனை உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும்.
  • பொது இடங்களுக்கென ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தெளிவான நெறிமுறைகள்படி கிருமி நாசினி உள்ளதா எனவும், மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய உறுதிப்படுத்த வேண்டும்.
  • கோவிட் தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து (RTPCR) மாதிரிகள் எடுக்கவேண்டும். தொற்று உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் தாமதமின்றி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.
  • காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி , நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் . நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி இதனை விரிவாக்கம் செய்யவேண்டும்.
  • மக்கள் அதிகமாக கூடும் தேர்தல் பரப்புரை கூட்டங்கள், கலாசார, வழிபாட்டு மற்றும் இன்னபிற கூட்டங்களுக்கு பொது மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம். கூட்டத்திற்கு நிபந்தனை விதித்து அனுமதி அளித்திட வேண்டும்.
  • பொதுமக்களை பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கவேண்டும்.
  • நோய் தொற்று அறிகுறி ஏதாவது இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, குடும்பநலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details