தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி கி. வீரமணி - ஸ்டாலின் வாழ்த்து - கி.வீரமணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 89ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

sமு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

By

Published : Dec 2, 2021, 11:19 AM IST

சென்னை:திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தனது 89ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) கி. வீரமணி வீட்டிற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

கி. வீரமணி - மு.க. ஸ்டாலின்

இதையடுத்து, மு.க. ஸ்டாலின் கி. வீரமணிக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். அதில், ”பெரியார் என்னும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்.

சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி. கருணாநிதியின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.

பொன்னாடை அணிவித்து வாழ்த்து

11 வயதில் கைகளில் ஏந்திய லட்சியக்கொடியை 89ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : திமுகவில் இணையுமாறு செந்தில்பாலாஜி மிரட்டல்: அதிமுக நிர்வாகியின் வழக்கு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details