தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடு: பயனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 109 குடும்பத்தினருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

Stalin
Stalin

By

Published : Jun 28, 2021, 10:49 PM IST

ஒய்எம்சிஏ சென்னை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் வின்சென்ட் ஜார்ஜ் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலால் நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒய்எம்சிஏ சென்னை அமைப்பு சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேற்கு பிராந்தியங்கரை, பெரிய கோவில் பத்து, கண்ணரிந்தன் கட்டளை ஆகிய மூன்று கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டது. அங்கு புயலில் வீடுகளை இழந்த மக்களுக்கு 109 வீடுகள், ஆயிரம் பேர் அமரக்கூடிய சமூகநல கூடங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புயலில் பாதிக்கப்பட்ட 109 வீடுகளுக்கான சாவிகளை வழங்கியும், சமூகநல கூடத்தை திறந்தும் வைத்தார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கஜா புயல் நேரத்தில் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதிகளின் அனுபவங்கள்..!

ABOUT THE AUTHOR

...view details