தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலம் பத்திரிகை துறை’: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பாலம் பத்திரிகை துறை என முதலமைச்சர் பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

By

Published : Nov 15, 2020, 12:07 PM IST

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவால் தொடங்கப்பட்ட தேசிய பத்திரிகை தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளிட்ட வாழ்த்து செய்தியில்,” உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைப்பதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகை துறையின் மகத்தான பணியினை இந்த இனிய நாளில் பாராட்டி, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details