இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை தனது கர்நாடக இசையால் கவர்ந்த பிரபல இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். டி.என். கிருஷ்ணன் அவர்களின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது வயலின் இசை என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.