தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

சென்னை : கரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களைத் தடுக்க மாநில, மண்டல அளவிலான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளையும் ஆய்வகத்தையும் மேம்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 110 கோடி ரூபாய் செலவிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

TN Chief Minister issued new notices under Rule 110
110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

By

Published : Mar 24, 2020, 1:01 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 110ஆவது விதியின் கீழ் பல்வேறு துறைசார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில் :-

மக்கள் நல்வாழ்வுத் துறை

கரோனா வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ் போன்ற தொற்று நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநில அளவிலான தனிமைபடுத்தப்பட்ட மருத்துவமனையாக தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை மேம்படுத்தப்படும்.

மேலும், மதுரை தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானடோரிய மருத்துவமனைகளும் மூன்று மண்டல அளவிலான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும். சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்திலுள்ள ஆய்வகத்தை நிலை உயர்த்தி மேம்படுத்தப்படும். இவற்றுக்கு 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ள துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வான்வழி அவசர கால சேவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும்


செய்தித் துறை

பத்திரிக்கையாளர்களுக்கு, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

தூத்துக்குடி வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத் தேவனின் மணி மண்டபத்தில் முழுவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.

தூத்துக்குடி மக்களால் “மக்களின் தந்தை” என போற்றப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸின் பிறந்த நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

தொழில் துறை:திருவண்ணாமலை செய்யாறு தொழிற் பூங்காவில், சிப்காட் நிறுவனத்தால் 770 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்பில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடங்க மருந்தியல் தொழிற்பூங்கா தொடங்கப்படும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை:நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும், உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான உணவுத் தொகை 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கான உணவுத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

உயர் கல்வித் துறை:தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்திற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிட்டு, அவ்வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details