தமிழ்நாட்டில் கரோனா நோய்ப் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இரண்டாயிரத்து 58 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 25 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் அளிக்கும் நோக்கிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.