தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2021 சட்டப்பேரவை தேர்தல்: வரும் 3ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்! - All party consultative meeting

சென்னை: தமிழ்நாட்டில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில், நவம்பர் 3ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

All party consultative meeting
All party consultative meeting

By

Published : Oct 13, 2020, 7:25 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்காளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டிவருகிறது.

வாக்களிக்கத் தகுதியான அனைத்து நபர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்துடனும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி மாதம் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், 2020 நவம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20201ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் பட்டியல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் அடுத்த மாதம் நவம்பர் 3ஆம் தேதியன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

இதையும் படிங்க:மூளை வளர்ச்சி குறைவு இயற்கை, அதை சிறுமைபடுத்தாதீர்கள்"- குஷ்பூவுக்கு பதிலடி கொடுத்த தீபக் நாதன்

ABOUT THE AUTHOR

...view details