சென்னை வேளச்சேரி காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் போஸ் (30) - பாக்கியம் தம்பதியினர். போஸ் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வேலை பார்த்துவந்த மணிக்கும்(22) அதே பகுதியைச் சேர்ந்த மதுரை மணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதனைக் கண்ட போஸ் இருவரையும் விலக்கிவிட்டு தன்னிடம் வேலை பார்த்து வந்த மணியை கண்டித்துள்ளார்.
முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு! - ஊழியரை தேடும் போலீசார்,
சென்னை: வேளச்சேரியில் முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஊழியரை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
உரிமையாளர் தனக்குச் சாதகமாக பேசாத ஆத்திரத்தில் இருந்த மணி, நான்கு நாட்களாக வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த மணி இன்று அதிகாலை, போஸின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் தீ பற்றி புகை அதிகாமாக, விழித்துக் கொண்ட போஸ் மற்றும் அவரது மனைவி பாக்கியம் ஆகிய இருவரும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போஸின் மனைவி பாக்கியம் இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மணியை வலைவீசித் தேடிவருகின்றனர்.