தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 11, 2020, 7:32 PM IST

ETV Bharat / state

"நெகிழியை முழுமையாக ஒழிக்க மக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு அவசியம்" - முதலமைச்சர் வேண்டுகோள்!

நெகிழியை முழுமையாக ஒழிக்க மக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு அவசியம் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் வேண்டுகோள்!
முதலமைச்சர் வேண்டுகோள்!

சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நெகிழியை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர்," நெகிழியை முழுமையாக தடைசெய்யும் முனைப்பில், 14 வகையான நெகிழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெகு நாட்களாக மக்கள் நெகிழியைப் பயன்படுத்தி வந்த நிலையில், அதனை முழுமையாக ஒழிப்பதற்கு மக்கள், வியாபாரிகளின் முழு ஒத்துழைப்பு அவசியம்.

நெகிழிப் பயன்பாட்டை தடுக்கும் விதமாக, உரிய முரையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் சோதனை செய்து உபயோகிப்போர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வீட்டு வசதி வாரியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் - துணை முதலமைச்சர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details