தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் ராயபுரத்தில் போட்டியிட தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் சவால் - chennai district news

சென்னை: ராயபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

By

Published : Jan 10, 2021, 7:54 PM IST

சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரி வளாகத்தில் தென்னிந்தியப் பத்திரிக்கையாளர் யூனியன் சார்பில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், உயர்கல்வித் துறைச் செயலர் அபூர்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பொங்கல் பரிசு வழங்குவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அனைவரும் வரவேற்று உள்ளனர். ஆனால் எங்களது திட்டத்தை அவர்கள் எடுத்துக் கொடுத்துவிட்டு எப்படி இப்படிச் செய்கிறார்கள். திமுகவினர் உப்பு போட்டு சாப்பிடுகின்றனரா என எங்களுக்குச் சந்தேகமாக உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குப் பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பக்குவமில்லாதவர். பெண் இனத்தை கேவலப்படுத்துவது, தனிமனிதர்களைத் தாக்குவது அரசியலில் கூடாது. ஆனால் இத்தகைய பேச்சுக்களை திமுக பேசுவதால், ஆபாச அரசியல் தலை தூக்குகிறதா?" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் கண்ணியத்தையும், இதனால் அவர்களுடைய லீலைகளும் ஆரம்பத்திலிருந்து வெளிவரும். கொளத்தூரில் போட்டியிடாமல், ராயபுரத்தில் மட்டும் போட்டியிட ஸ்டாலின் தயாரா?” என்றும் சவால் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details