தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் வாகனத்திற்கு சார்ஜ் மையங்கள் அமைக்க ஆய்வு - அண்ணா பல்கலைகழகம்! - battery car

சென்னை: பெட்ரோல் பங்குகள் போல் பேட்டரியால் இயங்கும் கார் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பது குறித்து அண்ணா பல்கலைகழகம் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்

By

Published : Feb 4, 2019, 12:00 AM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி செலவில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் அமைக்க, ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சில் வீடியோ கான்பரன்சிங்கில் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைகழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்கள் நிதியுதவி பெறுகின்றன.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் கூறியதாவது, "அண்ணா பல்கலைக்கழகம், ரூசா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பல்வேறு திட்டப் பணிகளை நிறைவு செய்துள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக அளிக்கப்பட்டுள்ள நிதியில் ரூ.15 கோடி கணினி துறை மேம்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளது. மீதமுள்ள ரூ.35 கோடியில், ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

அடிக்கல் நாட்டு விழா

அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் ஆகிய துறைகள் இணைந்து, பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கு பேட்டரி நிரப்பக்கூடிய நிலையங்களை ஏற்படுத்த ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வானது இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது தேவையான ஆலோசனைகளும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details