தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய தகவல்களை அறிய 300 பள்ளிகளுக்கு எல்சிடி ப்ரொஜெக்டர்! - அமைச்சர் கே.சி.கருப்பணன்

சென்னை: பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில், 300 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1.5 கோடி ரூபாய் செலவில் "எல்சிடி ப்ரொஜெக்டர்" கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/11-March-2020/6369760_34_6369760_1583928938191.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/11-March-2020/6369760_34_6369760_1583928938191.png

By

Published : Mar 11, 2020, 5:50 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அறிவிப்புகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

1. தமிழ்நாட்டின் 15 மாநகராட்சிகளுக்கு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்து மாநகராட்சி ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய் செலவில், 15 மாநகராட்சிக்கு மொத்தம் 120 லட்சம் செலவில் மூன்றாண்டுகள் செலுத்தப்படும்.

2. சுற்றுச்சூழல் துறை அறிஞர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பருவநிலை ஸ்டுடியோ உடன் இணைந்து வேளாண் மண்டலம் வாரியாக, காலநிலை மீள் வளர்ச்சி திட்டத்தை 332.82 லட்சம் மதிப்பில் 37 மாவட்டங்களில் தயாரிக்கப்படும். இத்திட்டம் 3 ஆண்டுக்கு செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில் 110. 94 லட்சம் செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

3.கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள சின்ன ஏரி 336 லட்சம் செலவில் கரையை வலுப்படுத்தி, தோட்டங்கள் அமைத்து சின்ன ஏரி புனரமைக்கப்படும்.

4. பிளாஸ்டிக் குறித்த வாகன விழிப்புணர்வுக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூபாய் 1.20 லட்சம் செலவில் 37 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.

5. பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பரப்பும் விதமாக, தேசிய பசுமை படை மற்றும் சூழல் மன்றம் அமைத்து மாணவ, மாணவிகளுக்கு சூழல் சார்ந்து போட்டிகள் நடத்துவதோடு, சூழல் சுற்றுலா அழைத்துச் செல்ல 1.50 லட்சம் செலவில் 30 மாவட்டங்கள் வீதம் 55.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

6. தேசிய பசுமை படை சூழல் மன்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு மாசினை தடுத்தல் போன்ற கருத்தரங்கு, 100 லட்சம் செலவில் நடத்தப்படும்.

7. தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அம்மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு பறக்கும் படை 50 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

8. திரவ மற்றும் திட கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் மதிப்பில் பசுமை விருது வழங்கப்படும்.

9. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஒரு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம் தேர்வு செய்யப்பட்டு பசுமை விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

10. பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில், 300 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1.5 கோடி ரூபாய் செலவில் "எல்சிடி ப்ரொஜெக்டர்" கருவிகள் வழங்கப்படவுள்ளன.

11. சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் காற்றின் தன்மை கண்காணிக்கும் திறனை அதிகப்படுத்த, மேலும் ஒரு நடமாடும் தொடர் காற்று கண்காணிப்பு ஆய்வகம் 2.5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட உள்ளது.

12. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகத்தரம் வாய்ந்த சிறந்தத் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இரண்டு கோடி செலவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

வனத்துறை அறிவிப்புகளை திண்டுக்கல் சி. சீனிவாசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

1. புலிகள் காப்பகங்களில் வேட்டை தடுப்பு காவலர்கள் போக்குவரத்து முகாம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி அருகில் பாரம்பரிய மற்றும் பல்லுயிர் பூங்கா 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

3. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கலைநயம் மிக்க கருத்து விளக்கக்கூடிய கூட்டரங்கம் 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

4. தமிழக வனத்துறையில் உள்ள 71 பழமையான கட்டடங்களை பராமரிக்க, 10 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க:"ஹைட்ரோகார்பன் போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டமும் தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது" முதலமைச்சர் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details