தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.இ., பி.டெக். துணை கலந்தாய்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Btech

சென்னை: தமிழ்நாடு பொறியியல் படிப்பு பி.இ., பி.டெக்., சேர்க்கை 2020-21 ஆம் ஆண்டிற்கான துணை கலந்தாய்விற்கு நாளை (நவம்பர் 3) முதல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tn_che_10_be_btech_counseling_script_7204807
tn_che_10_be_btech_counseling_script_7204807

By

Published : Nov 2, 2020, 10:17 PM IST

இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு பொறியியல் பி.இ.,பி.டெக்., மாணவர்கள் சேர்க்கை 2020-21 பொது கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற 12ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி படித்த தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக் கலந்தாய்வில் கலந்துகொண்டு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 52 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கும். மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக நாளை முதல் 7ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேற்படி, மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details