தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்புரவு தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் - ஆணையரிடம் மனு

சென்னை: குப்பைகளை தரம் பிரிக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு கொடுங்கள் என மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tn-che
tn-che

By

Published : Mar 18, 2020, 11:19 PM IST

சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கும் பணிகளில் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.

மனு

தற்போது மனித குலத்தை மிரட்டி வரும் கரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களால் அன்றாடம் பயன்படுத்தி வீசப்படுகிற குப்பைகள் தினந்தோறும் ஐங்தாயிரம் டன்களுக்கும் அதிகமாக தரம் பிரிக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்று இவர்களுக்கு ஏற்படும் நிலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே குப்பையை தரம் பிரிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே குப்பைகொட்டும் வளாகத்திற்கு அனுப்பினால் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பு மேம்படும்.

இதனை செயல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தொடர்பாக தான் பரிசீலிப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details