lதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நாகப்பட்டினம் தொகுதி, நாகூர் பட்டினச்சேரி, வெட்டாற்று வடகரையின் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்வருமா என்று நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்," நாகப்பட்டினம் தொகுதி, நாகூர் பட்டினச்சேரி, வெட்டாற்று வடகரையின் முகத்துவாராத்தில், 360 அடி நீளத்துக்கு சுவர் 20 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையைப் பொறுத்தவரை, பொதுவாக தமிழ்நாடு அரசு சார்பாக குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கப்படும்.
ஆனால், அதிமுக அரசு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போன்று, இந்த அரசு சார்பாக ஆண்டுக்கு மீனவர்களுக்கு நேரடியாக 19 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். மீன்வளத்துறை சார்பாக, தமிழ்நாடு அரசு ஒரு குழு அமைத்து உள்ளது.