'மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதில் தமிழ்நாடு முதலிடம்' - டிடிவி தினகரன் வேதனை - ttv tweet
சென்னை: "மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக வந்த புள்ளி விவரம் வேதனையளிக்கிறது" என்று, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், "மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரம் வேதனை அளிக்கிறது. மனிதக்கழிவுகளை அகற்றும் பணியின் போது தமிழ்நாட்டில் இதுவரை 144 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் தருகிறது. மனிதக்கழிவுகளை இனிமேல் மனிதன் அகற்றக் கூடாது என்கிற நிலையை பழனிசாமி அரசு தமிழ்நாட்டில் விரைந்து உருவாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.