சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, "ஓசூர் தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா" என்று ஓசூர் உறுப்பினர் சத்யா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,"ஓசூர் நகரத்தை பொறுத்தவரை சிப்காட் - 2 செயல்பட்டு வருவதாகவும், அதில் 347 நிறுவனங்கள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு 30 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் 5 புதிய நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டில் (2019) நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பின்பு புதியதாக பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம், 635 கோடி ரூபாய் மதிப்பில் ஓசூரில் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.