தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 31 லட்சத்தை கடந்த கரோனா பரிசோதனை - மாநகராட்சி தகவல் - மருத்துவ முகாம்கள்

சென்னை: சென்னை முழுவதுமாக மே முதல் 31 லட்சத்து 38 ஆயிரத்து 330 நபர்கள் மருத்துவ முகாம் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

medical_camp
tn_che_04_medical_camp_script_image_7209208

By

Published : Oct 22, 2020, 12:56 AM IST

சென்னையில் திரு.வி.க. நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதேபோல் அங்கு குணமடைந்தவரின் சதவீதமும் பாதிப்புக்கு ஏற்ப சரிசமமாக உள்ளது.

கரோனா நோய்த் தொற்றை பரவாமல் குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு நாள்தோறும் முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் காலை, மாலை என இருமுறை மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் மே 8ஆம் தேதி முதல் இன்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 62 ஆயிரத்து 435 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் 31 லட்சத்து 38 ஆயிரத்து 330 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களின் மூலம் 27 ஆயிரத்து 572 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 21) 409 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன, இதில், அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 49, தண்டயார்பேட்டையில் 42 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் மொத்தம் 20 ஆயிரத்து 610 நபர்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 686 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு இருந்த தடுப்பு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details