தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் வடிகாலில் தாய், மகள் விழுந்து பலியான விவகாரம் : டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை : நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை, ஜனவரி 19ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 24, 2020, 5:46 PM IST

Updated : Dec 24, 2020, 9:27 PM IST

கடந்த டிசம்பர் 7ஆம் தேதி,சென்னை, நொளம்பூர் அருகே அமைந்துள்ள மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம், மூடப்படாமலிருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து தனியார் கல்லூரிப் பேராசிரியர் கரோலின் பிரெசில்லா, அவரது மகள் இவாலின் இருவரும் பரிதாபமாய் உயிரிழந்தனர். முன்னதாக இவர்கள் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்து இருவருக்கும் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிச.24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக இந்த நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க :மழைநீர் வடிகால் கால்வாயில் தவறிவிழுந்து தாய், மகள் உயிரிழப்பு

Last Updated : Dec 24, 2020, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details