தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் ஜெயராமன் குடும்பத்தினர் முதலமைச்சருடன் சந்திப்பு! - TN CM Edappadi palaniswami

சென்னை: நெல் ஜெயராமன் கண்டுபிடிப்புகளான அரியவகை நெல் உற்பத்திகள் குறித்து 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாடமாக வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

family

By

Published : Jun 11, 2019, 2:35 PM IST

வேளாண்மையில், சுமார் 169 வகையான மூலிகை குணங்கள் நிறைந்த நெல் வகைகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். அவர் சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக மரணமடைந்த நிலையில், அவரது சிறந்த தொண்டை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டின் 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் குறித்து பாடமாக வெளியிட்டு சிறப்பித்தது.

இந்தச் செயலுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெல் ஜெயராமனின் சகோதரர் ஞானசேகரன், நெல் ஜெயராமன் பெருமையை வருங்கால சந்ததிகள் அறியும் பொருட்டு, எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமலேயே, அவரது சாதனைகளை 12ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் பாடமாக வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் தங்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும், நெல் ஜெயராமனின் கண்டுபிடிப்புகளை பாடமாக வெளியிட்டதன் மூலம் வருங்கால சந்ததியினர் மிகுந்த பயனடைவார்கள் எனவும், இது நடப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நெல் ஜெயராமன் குடும்பத்தினர்

ABOUT THE AUTHOR

...view details