ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் நெகிழி பயன்பாடு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதா என்று சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி," கொடைக்கானல், ஏற்காடு போன்ற வனம் நிறைந்த பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் மூலமும் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு அரசு நெகிழி பயன்பாட்டை தடுப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கும்போது, பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்திலேயே நெகிழி தடை சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். நெகிழி ஒழிப்பு மிகவும் முக்கியமான திட்டம்.