சென்னை கொடுங்கையூரைச் சேரந்த சரத்குமார் என்பவர், பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்றிரவு புழல் சைக்கிள் கடை அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஐந்து பேர் குண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்துள்ளது.
மேலும், கத்தியால் அவரை வெட்டி, அவரிடமிருந்து 20ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்துள்ளது. சரத்குமார் வெட்டுக்காயங்களுடன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.