தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழிப்பறி, கரன்சி மோசடி செய்த ஏழு பேர் கைது -போலீசார் அதிரடி - seven members arrested

சென்னை: வெளிநாட்டு கரன்சியில் மோசடி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

police

By

Published : Jul 22, 2019, 8:49 AM IST

சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜெயக்குமாரை கத்தியை காட்டி மிரட்டி மர்ம கும்பல் ஒன்று இரண்டாயிரம் ரூபாய் வழிப்பறி செய்து தப்பித்து ஓடியது. இதனையடுத்து, பணத்தை பறிகொடுத்த ஜெயக்குமார், திருவான்மியூர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறை ஸ்டேட்மென்ட்

இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட ராபின், மோகித் ஜாபர், சுமன் மற்றும் பக்கி பேகம் உள்ளிட்ட 7 பேர் திருவான்மியூர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டு கரன்சிகளைக் காட்டி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவான்மியூர் காவல்துறையினர் அந்த ஏழு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details