காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள புதுக்கோட்டை வீராங்கனை அனுராதாவிற்கு டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அதில், காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதாவை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன் என்றும்,
டி.டி.வி.தினகரனின் ட்விட்டர் வாழ்த்து நெம்மேலிப்பட்டி என்ற சிறிய கிராமத்தில், மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்து இச்சாதனையைப் புரிந்திருக்கிற அனுராதா இன்னும் பல பெருமைகளை நம் நாட்டிற்குத் தேடித்தரவேண்டும். அவரது கனவுபடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிட வாழ்த்துகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரனின் ட்விட்டர் வாழ்த்து
மேலும் அவர், அனுராதாவின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கின்ற, அவருக்காக கல்வியைத் துறந்த சகோதரர், கூலி வேலை செய்யும் தாய் ஆகியோரின் தியாகத்தைப் போற்றுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரனின் ட்விட்டர் வாழ்த்து