தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் தளபதி விஜய் இன்று (ஜூன் 22) தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் விஜய்யின் ரசிகர் மன்றம் சார்பில் சிறப்புப் பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் வழங்கிவருகின்றனர்.