இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த துளசியம்மாள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா சிவகிரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி செண்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த மல்லிகா, கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அய்யம்மாள், சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திம்மநத்தம் கிராம உட்கடை துரைச்சாமிபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பிள்ளை, சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஆவடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் ஆகிய எட்டு பேர் தேர்தல் நாளன்று வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது மாரடைப்பு, மயங்கி விழுதல் உள்ளிட்ட வெவ்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
தேர்தல் நாளன்று உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிதியுதவி - fund
சென்னை: தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்த எட்டு பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
cm
இவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த எட்டு நபர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.