தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு! - குடிநீர் பிரச்னை

சென்னை: மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து அதன் அவசியம் குறித்து சென்னை பெருநகர ஆணையர் கோ. பிரகாஷ் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு

By

Published : Jun 23, 2019, 4:16 PM IST

Updated : Jun 23, 2019, 4:53 PM IST

தமிழ்நாடு எப்போதும் காணாத அளவு மாபெரும் தண்ணீர் சிக்கலை சந்தித்துவருகிறது. மக்கள் தண்ணீருக்காக அலைவதை காண முடிகிறது. நிலத்தடி நீர் வற்றியிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தண்ணீரை எந்த வழியில் எல்லாம் பாதுகாக்க, பரமாரிக்க முடியுமோ, அந்தந்த வழிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் பணியில் பலரும் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி சென்னை பெருநாகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

அதன்படி இன்று அடையார் மண்டலம், ரஞ்சித் சாலையிலுள்ள குடியிருப்புகளில் நேரடியாக சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

Last Updated : Jun 23, 2019, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details