துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீடு, சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், குருமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததாகத் தெரிகிறது.
அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், பெட்ரோல் குண்டு வீச வந்தவர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.