தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாநிலை போராட்டம் - old pension scheme

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் உண்ணாநிலை போராட்டம் இன்று நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாநிலை போராட்டம்

By

Published : Jul 7, 2019, 5:00 PM IST

அரசுப்பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே பல கட்டங்களாகத் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் மீது தமிழ்நாடு அரசு பணி நீக்கம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாநிலை போராட்டம்

மேலும் இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details