ரயில்வே விளையாட்டு சங்கம் சார்பில் பிட் இந்தியா சைக்ளோத்தான் இன்று நடைபெற்றது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில்வே அலுவலர்கள் சங்கம் வளாகத்திலிருந்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பிட் இந்தியா சைக்ளோத்தான்! - chennai district news
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில்வே அலுவலர்கள் சங்கம் அலுவலகத்திலிருந்து தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கம் சார்பில் இன்று பிட் இந்தியா சைக்ளோத்தான் நடைபெற்றது.
பிட் இந்தியா சைக்ளோத்தான் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பிறகு பேசிய ஜான் தாமஸ், "இந்த பிட் இந்தியா பிரச்சாரம் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த பேரிடர் காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியம். மத்திய விளையாட்டு அமைச்சகம் பிட் இந்தியா இயக்கம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு விதமான விளையாட்டுகளை நடத்திவருகின்றது. அதில் ஒன்று தான் 'பிட் இந்தியா சைக்ளோத்தான்'. இதில் பங்கு பெறும் நபர்கள் 10 வினாடி வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட வேண்டும்" என தெரிவித்தார்.