நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. பொழுதுபோக்கு தளங்கள், கடைவீதிகள், பேருந்து போன்றவற்றில் அதிக அளவில் மக்கள் அதிக அளவு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறுபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களுக்குள் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அறிவித்தது. இதனை மீறுபவர்களிடமிருந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அபராதம் வசூலிக்கின்றனர். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் மக்கள் மெட்ரோ ரயில்நிலைய நுழைவு வாயிலில் மட்டும் முகக்கவசம் அணிந்துவிட்டு, அதன்பின் அதனை கழற்றுவிடுவது அல்லது முறையாக அணியாமல் செல்கின்றனர்.