தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக வட்டச் செயலாளர் மீது தாக்குதல்; உட்கட்சி பூசல் என மனைவி குற்றச்சாட்டு! - கொலை

சென்னை: திமுக வட்டச் செயலாளர் சேகர் மீது பெரம்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி பேட்டி

By

Published : Jun 8, 2019, 7:47 PM IST

சென்னை 34ஆவது வட்ட திமுக செயலாளர் சேகர் மீது பெரம்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.சேகரின் ஆதரவாளர்கள் கொலைவெறித் தாக்குதல்நடத்தியதாக அவரது உறவினர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வட்டச் செயலாளர் சேகரின் மனைவி, "கடந்த 20 வருடங்களாக திமுகவில் உறுப்பினராக இருக்கும் எனது கணவர் சேகர், ஐந்து வருடங்களாக வட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று எம்எல்ஏ ஆர்.டி சேகரின் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஆர்.டி. சேகரின் ஆதரவாளர்களுக்கும் எனது கணவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் எம்எல்ஏவின் தூண்டுதலின் பேரில் நான்கு அடியாட்கள் என் கணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுகவினரிடையே மோதல்

ஏற்கெனவே, வட்டச் செயலாளர் பதவிக்கு இருவருக்கும் இடையே உட்கட்சி மோதல் இருந்து வந்தது. ஆர்.டி. சேகர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அநாகரிக அரசியல் நடத்தி வருகிறார். இதனால் தன்னுடைய மகன், கணவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஆர்.டி. சேகரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளேன்” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details