தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு! - கிராம நிர்வாக அலுவலர் தேர்வு

சென்னை: குருப் 4-யில் அடங்கிய இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்டப் பணியிடங்களில் காலியாக உள்ள 6 ஆயிரித்து 500க்கும் மேற்பட்ட இடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி குறித்த தகவலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

By

Published : Jun 7, 2019, 11:38 PM IST

தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பபடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்ட போது, குருப் 4 தேர்வுக்கான பணியிடங்களுக்கு உரிய அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குருப் 4-யில் அடங்கிய பணியிடங்களுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான வயது, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வரும் 14ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருப்-4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், சுமார் 4 ஆயிரம் இளநிலை உதவியாளர், 500 கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6 ஆயிரத்துக்கு 500 மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும், இந்த பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உரியது என்று அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details