சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கவுதமன், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு இந்து தீவிரவாதி எனக் கமல் கூறியது பிக்பாஸை போன்ற ஒரு நாடகம். விவசாயிகளின் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டது.
கமல் ஒரு இந்து தீவிரவாதி: இயக்குநர் கவுதமன் விமர்சனம் - கோட்சே
சென்னை: கமல் ஒரு இந்து தீவிரவாதி எனவும், பாஜக கமலை வளர்த்து வருவதாகவும் இயக்குநர் கவுதமன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி எந்த ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆனால் கமல்ஹாசன் கோட்சேவை இந்து தீவிரவாதி என கூறியவுடன் பிரதமர் நேரலையில் பேட்டி அளிக்கிறார். அப்படி என்றால் இவர்களின் நோக்கம் கமல்ஹாசனை வளர்க்க வேண்டும். இது போன்று பேசி கமல்ஹாசன் வளர்ந்த பின்னர், பாஜக அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கமல்ஹாசன் ஒரு இந்து தீவிரவாதி, காலம் அதற்கு பதில் சொல்லும். தமிழ்நாட்டு மண்ணில் வளர்ந்து எங்களை மீண்டும் அழிப்பதற்கு கமல் மூலம் திட்டமிட்டுள்ளீர்கள். பாஜகவினர் சோ போன்ற அதிகாரமிக்க ஒரு தலைவரை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். சோ ஒரு அரசியல் விமர்சகராக இருந்தார். அந்த இடத்தில் அதிகாரமிக்க ஒரு தலைவரை வளர்த்தெடுக்க பாஜக திட்டமிடுகிறது. அதற்கு எங்களின் தமிழினம் பலியாகாது என தெரிவித்தார்.