இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்பவர்கள் இரண்டு தாள்கள் எழுத வேண்டும். இதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்- தேர்வு வாரியம் - tet exam
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இதுவரை ஆறு லட்சத்து நான்காயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
இரண்டு தாள் அடங்கிய இந்தத் தேர்வை எழுத இதுவரை ஆறு லட்சத்து நான்காயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் தாளுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் அடங்குவர்.