சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என்.சிவக்குமார் ஜூலை 7 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூலை 9) முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அரசு கேபிளில் ஓடிடி - குறிஞ்சி என். சிவக்குமார் - tn cable tv
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளிப்படைத் தன்மையோடும், மக்களுக்கு குறைந்த விலையிலும் சேவைகளை வழங்கும் என குறிஞ்சி என்.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
குறிஞ்சி என். சிவக்குமார்
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தனக்கு இந்தப் பொறுப்பு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளிப்படைத் தன்மையோடும், மக்களுக்கு குறைந்த விலையிலும் சேவைகளை வழங்கும். ஓடிடி தளங்களை அரசு கேபிள் மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி என். சிவகுமார் நியமனம்!
Last Updated : Jul 9, 2021, 7:24 PM IST