சென்னை:உளுந்தூர் பேட்டையில் தனியார் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக பதிவான வழக்கில் திமுகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், திமுக மாநிலங்களவை குழுவின் தலைவருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா திருச்சியில் கைது செய்யப்பட்டார். இவர் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் பதவியில் உள்ளார்.
இதனிடையே, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த கைது நடவடிக்கைக்கு டிவீட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளை தொடுப்பது திமுக அரசுக்கு புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.
எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் - திருச்சி சிவா மகன் கைதுக்கு சீறி எழுந்த அண்ணாமலை... எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் - திருச்சி சிவா மகன் கைதுக்கு சீறி எழுந்த அண்ணாமலை... சகோதரர் சூர்யா சிவா கைது செய்யப்பட்டதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸை சந்தித்த அண்ணாமலை - என்னவா இருக்கும்?